இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2017 மே 26ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2017-05-26

கௌரவ திலங்க சுமதிபால, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2011 , 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளுக்கான இலங்கை கடற்படை
(ii) 2016 ஆம் ஆண்டுக்கான கிறஸ்தவ மத அலுவல்கள் திணைக்களம்
(iii) 2016 ஆம் ஆண்டுக்கான கிளிநொச்சி மாவட்டச் செயலகம்
(iv) 2016 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்ற அரசாங்கக் கட்சி முதற்கோலாசானின் அலுவலகம்

ஆகியவற்றின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கைகள்

(v) 2016 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் 2017.04.01 முதல் 2017.04.30 ஆம் திகதி வரையுள்ளவாறு தேசிய வரவு செலவுத்திட்டத்தின் செலவினத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் வரவு செலவுத் திட்ட உதவிச் சேவைகள் மற்றும் அவசர தேவைப்பாடுகள் பொறுப்புக் கருத்திட்டத்தின் மூலம் செய்யப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் தொடர்பான குறிப்பு


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i) போக்குவரத்து  மற்றும் தொலைத்  தொடர்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ சமல் ராஜபக்ஷ அவர்கள் சார்பாக குழு உறுப்பினர் கௌரவ இ. சாள்ஸ் நிர்மலநாதன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.

(ii) சுகாதாரம் மற்றும் மனித சேமநலம், சமூக வலுவூட்டல் பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ லக்கி ஜயவர்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.

(iii) சர்வதேச தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை  அக்குழுவின் தவிசாளர் கௌரவ ரஞ்சித் அலுவிஹாரே அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i) கௌரவ ஏ. டி. சுசில் பிரேமஜயந்த                   
(ii) கௌரவ துமிந்த திசாநாயக்க                    -           இரண்டு மனுக்கள்
(iii) கௌரவ புத்திக பத்திறண                   
(iv) கௌரவ அ. அரவிந்த் குமார்                    -            இரண்டு மனுக்கள்

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழான வினாக்கள்

(i) கௌரவ தினேஷ் குணவர்தன

நாட்டில் நிலவும் டெங்கு தொற்றுநோய் தொடர்பானது

(ii) கௌரவ டக்ளஸ் தேவானந்தா

தட்டான்குளம் மீள்குடியேற்ற கிராம மக்கள் எதிர்கொள்ளும் குடிநீர் பிரச்சினை தொடர்பானது


சர்வதேச தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு

வட மாகாண சுற்றுலாத்துறை அதிகாரசபை நியதிச் சட்ட வரைவு

இதன் அறிக்கையை பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட கால எல்லையை 2017 யூலை மாதம் 03ஆம் திகதிவரை காலத்தை நீடிப்பதற்கான உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரும் பாராளுமன்றச் சபை முதல்வருமாகிய கெளரவ லக்ஷ்மன் கிரிஎல்ல அவர்களின் பிரேரணையை சபை ஏற்றுக்கொண்டது.


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

கெளரவ விமலவீர திசாநாயக்க அவர்களுக்கு “ஸ்ரீ லங்கா கமநல நிறுவன (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் கமத்தொழில் அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

வாழ்வின் எழுச்சி சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்

சபையால் அங்கீகரிக்கப்பட்டன.


அதனையடுத்து, 1356 மணியளவில் பாராளுமன்றம் 2017 ஜூன் 06ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom