இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2017 ஜூன் 07ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2017-06-07

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’ : பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான நடத்தைக் கோவை ஆகியவற்றின் இறுதி வரைபுகள்
‘B’ :  உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவொன்றின் பிரதி கிடைக்கப் பெறல்
‘C’ :  குழுக்களின் அறிவிப்புகளுக்கான நவீன டிஜிட்டல் காட்சியை நிறுவுதல்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2016 ஆம் ஆண்டுக்கான அரசாங்க சேவை ஆணைக்குழு
(ii) 2016 ஆம் ஆண்டுக்கான சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சு
(iii) 2016 ஆம் ஆண்டுக்கான தேசிய தாவரவியல் பூங்காக்கள் திணைக்களம்
(iv) 2016 ஆம் ஆண்டுக்கான போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சு
(v) 2016 ஆம் ஆண்டுக்கான துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அலுவல்கள் அமைச்சு
(vi) 2016 ஆம் ஆண்டுக்கான மன்னார் மாவட்டச் செயலகம்
(vii) 2016 ஆம் ஆண்டுக்கான நீதி அமைச்சு
(viii) 2016 ஆம் ஆண்டுக்கான வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு
(ix) 2016 ஆம் ஆண்டுக்கான அஞ்சல் திணைக்களம்
(x) 2016 ஆம் ஆண்டுக்கான சட்டமும் ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சு
(xi) 2016 ஆம் ஆண்டுக்கான தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சு
(xii) 2016 ஆம் ஆண்டுக்கான விளையாட்டுத்துறை அமைச்சு

ஆகியவற்றின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கைகள்

(xiii) 2008 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க கடல்சார் தீழ்ப்புத் தடைச் சட்டத்தின் பிரிவு 6 (உ) மற்றும் பிரிவு 21 உடன் சேர்த்து வாசிக்கப்படும் பிரிவு 51   கீழ் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2016 திசெம்பர் 06 ஆம் திகதிய 1996/27 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்

(xiv) 2014 ஆம் ஆண்டுக்கான சனாதிபதி நிதியம் பற்றிய கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை

(xv) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 27(1) ஆம் பிரிவின்  கீழ் உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையின் மீது, ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தில் தொழில் நுட்பவியற் கற்கைகள் பீடமொன்றை நிறுவுவது தொடர்பில்  ஆக்கப்பட்டு, 2017 ஏப்பிறல் 19 ஆம் திகதிய 2015/44 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை

(xvi) 1985 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க மற்றும் 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க சட்டங்களின் மூலம் திருத்தப்பட்டவாறான,  1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதிகள் மற்றும் ஏற்றமதிகள் (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் 4 ஆம் பிரிவின் (3) ஆவது உப பிரிவுடனும் 14 ஆம் பிரிவுடனும்  சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 20 ஆம் பிரிவின் கீழ், அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சரினால்  ஆக்கப்பட்டு, 2017 மே 19 ஆம் திகதிய 2019/24 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i) கௌரவ ஜோன் அமரதுங்க                   
(ii) கௌரவ அஜித் பி. பெரேரா                       -          ஆறு மனுக்கள் 
(iii) கௌரவ அசோக் அபேசிங்க                   
(iv) கௌரவ வாசுதேவ நாணாயக்கார            -         இரண்டு மனுக்கள்
(v) கௌரவ எம்.எஸ். தெளபீக்                       -         இரண்டு மனுக்கள்
(vi) கௌரவ கே.கே. பியதாஸ                   
(vii) கௌரவ க. துரைரெட்ணசிங்கம்

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழான வினாக்கள்

(i) கௌரவ தினேஷ் குணவர்தன

அரச மருத்துவ பீடங்கள், பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு மற்றும் அரசாங்கம் ஆகியவற்றுக்கிடையில் சைடம் சிக்கல் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினை தொடர்பானது

(ii) கௌரவ டக்ளஸ் தேவானந்தா

பருத்தித்துறையில் மீன்பிடித் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்காக காணிகளை கைப்பற்றுதல் தொடர்பானது

(iii) கௌரவ அநுர திசாநாயக்க

கிராம உத்தியோகத்தர் சேவைக்கு ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்யும் அரசாங்கத்தின் முடிவு தொடர்பானது


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

(i) தொல்பொருளியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தை அகற்றல் தொடர்பாக கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் அவர்கள் கூற்றொன்றினை முன்வைத்தார்.

(ii) தட்டான்குளம் மீள்குடியேற்ற கிராம மக்கள் எதிர்கொள்ளும் குடிநீர் பிரச்சினை தொடர்பாக 2017.05.26 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழ் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எழுப்பிய வினாவிற்கு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்ற மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் கௌரவ டி.எம். சுவாமிநாதன் அவர்கள் பதிலளித்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

விளையாட்டுக்கள் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்

சபையால் அங்கீகரிக்கப்பட்டன.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“பிளாத்திகினால் சுற்றாடல் விளைவை தடுத்தல்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ எட்வட் குணசேகர அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1924 மணியளவில் பாராளுமன்றம் 2017 ஜூன் 09ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom