இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2018 ஜனவரி 24ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2018-01-24

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’ : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்


சபாநாயகர் பத்திரங்களைச் சமர்ப்பித்தல்

இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம்-

•    2014 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் முதலாவது தொகுதியின் XV மற்றும் XVI ஆம் பகுதிகளையும்;
•    2015 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் முதலாவது தொகுதியின் IV மற்றும்  XXV ஆம் பகுதியையும் ஐந்தாவது தொகுதியின் I ஆம் பகுதியையும் ஆறாவது தொகுதியின் XIII மற்றும் XIV ஆம் பகுதிகளையும்;  மற்றும்
•    2016 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் முதலாவது தொகுதியின் IV மற்றும் V ஆம் பகுதிகளையும்

இவ்வறிக்கைகளை அச்சிடுவதற்கு பாராளுமன்றம் அனுமதியளித்தது.


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2015 ஆம் ஆண்டுக்கான நிருவாகத்துக்கான பாராளுமன்ற ஆணையாளர் அலுவலகம் (ஒம்புட்ஸ்மன்)
(ii)   2015 ஆம் ஆண்டுக்கான சுற்றுலா அபிவிருத்தி நிதியம்
(iii)    2015 ஆம் ஆண்டுக்கான இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை
(iv)    2015 ஆம் ஆண்டுக்கான கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனம்
(v)    2015 ஆம் ஆண்டுக்கான தேசிய விஞ்ஞான, தொழில்நுட்ப ஆணைக்குழு
(vi)    2015 ஆம் ஆண்டுக்கான இலங்கைக் கட்டளைகள் நிறுவனம்
(vii)    2015 மார்ச் 31 ஆம் திகதி முடிவடைந்த ஆண்டுக்கான லங்கா லேலன்ட் (தனியார்) லிமிடட்
(viii)    2015 ஆம் ஆண்டுக்கான இலங்கை தேசிய நீரியல்வாழ் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகார சபை
(ix)    2015 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட குருநாகல் பெருந்தோட்ட பயிர்ச்செய்கைகள் கம்பனி
(x)    2014 ஆம் ஆண்டுக்கான இலங்கை அச்சக நிறுவகம்

ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்

(xi)    2016 ஆம் ஆண்டுக்கான உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு
(xii)    2016 ஆம் ஆண்டுக்கான கம்பஹா மாவட்டச் செயலகம்

ஆகியவற்றின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கைகள்


மனுக்களைச் சமர்ப்பித்தல்

கௌரவ புத்திக பத்திறண         -       பதின்மூன்று மனுக்கள்

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழான வினாக்கள்

(i)    கௌரவ தினேஷ் குணவர்தன

தேசிய அரசாங்கம் அமைப்பதன் தீர்மானம் மற்றும் அமைச்சர்களின் எண்ணிக்கை

(ii) கௌரவ அநுர திசாநாயக்க

கதிர்காமத்தில் காவற்துறையின் துப்பாக்கிச் சூடு

மேற்சொன்ன வினாவிற்கு சட்டமும் ஒழுங்கும் இராஜாங்க அமைச்சர் கௌரவ பியசேன கமகே அவர்கள் பதிலளித்தார்.


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

வளிமண்டலவியல் திணைக்களத்தின் காலநிலை முன்னறிவிப்புக்கள் தமிழில் வழங்கப்படாமை தொடர்பாக 2017.12.07 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழ் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எழுப்பிய வினாவிற்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் கௌரவ அநுர பிரியதர்ஷன யாப்பா அவர்கள் பதிலளித்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

கடற்றொழில் (வெளிநாட்டு மீன்பிடி வள்ளங்களை ஒழுங்குபடுத்தல்) (திருத்தச்) சட்டமூலம்

சபையினால் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“வடக்கில் நடைபெறும் ‘1000 பாலங்கள்’ நிகழ்ச்சித்திட்டத்தின் விபரம்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ சி. சிறீதரன் அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1652 மணியளவில் பாராளுமன்றமானது 2018 பெப்ரவரி 19ஆந் திகதி திங்கட்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom