இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2018 பெப்ரவரி 06ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2018-02-06

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


புதிய உறுப்பினர்களின்  உறுதிப்பிரமாணம் அல்லது சத்தியப்பிரமாணம்

கௌரவ எம்.எச்.எம். சல்மான் அவர்களின் இராஜினமா காரணமாக ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்காக கெளரவ அகமதுலெப்பை முஹம்மது நசீர் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக கெளரவ சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’ : 14ஆம் இலக்க நிலையியற் கட்டளைகளின் கீழ் பாராளுமன்றத்தைக் கூட்டுதல்
‘B’ : ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கைகள் தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர்கள் பின்பற்ற வேண்டிய நடத்தை முறை


ஒத்திவைப்புப் பிரேரணை

“இலங்கை மத்திய வங்கியினால் திறைசேரி முறிகளை வழங்குதல் தொடர்பாக பரீட்சித்துப் பார்க்கும் மற்றும் புலனாய்வு செய்யும் ஜனாதிபதி புலனாய்வு ஆணைக்குழு மற்றும் பாரிய மோசடி, ஊழல், அதிகார துஷ்பிரயோகம், அரச சொத்துக்கள் மற்றும் சிறப்புரிமைகளை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஆணைக்குழு ஆகியவற்றின் அறிக்கைகள்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை பிரதம அமைச்சர், கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1600 மணியளவில் பாராளுமன்றமானது 2018 பெப்ரவரி 19ஆந் திகதி திங்கட்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom