இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2018 மார்ச் 06ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2018-03-06

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’ :  உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பிரதிகள் கிடைக்கப் பெறல்
‘B’ :  நிலையியற் கட்டளைகள் குழுவின் கூட்டம்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளுக்கான ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின்  வருடாந்த அறிக்கைகளும் நிதிக்கூற்று அறிக்கைகளும்
(ii)    2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளுக்கான தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின்  வருடாந்த அறிக்கைகள்
(iii)    2015 ஆம் ஆண்டுக்கான இலங்கைத் தேயிலைச் சபையின் வருடாந்த அறிக்கை
(iv)    2015 ஆம் ஆண்டுக்கான இலங்கை அபிவிருத்தி நிருவாக நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை
(v)    2015 ஆம் ஆண்டுக்கான ஆட்களையும், ஆதனங்களையும் கைத்தொழில்களையும் புனரமைப்புச் அதிகாரசபையின் வருடாந்த அறிக்கையும் நிதிக் கூற்றும்
(vi)    2014 ஆம் ஆண்டுக்கான தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை

(vii)    2015 ஆம் ஆண்டுக்கான இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் நிகழ்ச்சிகள் மற்றும் செயலாற்றுகை பற்றிய அறிக்கை

(viii)    2017 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க சட்டத்தினால் திருத்தப்பட்டவாறான 1988 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க, மாகாண சபைத் தேர்தல்கள் சட்டத்தின் 3அ. (11) ஆம் பிரிவின் பிரகாரம் எல்லை நிர்ணயக் குழுவினால் அமைச்சருக்குச் சமர்ப்பிக்கப்பட்ட அக்குழுவின் அறிக்கை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i)    சுகாதாரம் மற்றும் மனித சேமநலம், சமூக வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கையை அக்குழுவின் தவிசாளர் கெளரவ லக்கி ஜயவர்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii)    பொருளாதார அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கையை அக்குழுவின் தவிசாளர் கௌரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ பி. ஹரிசன்                    
(ii)    கௌரவ வசந்த அலுவிஹாரே                    
(iii)    கௌரவ இரான் விக்கிரமரத்ன                    -            இரண்டு மனுக்கள்
(iv)    கௌரவ எட்வட் குணசேகர                    
(v)    கௌரவ ஜயந்த சமரவீர                    
(vi)    கௌரவ ஜானக வக்கும்புர                    
(vii)    கௌரவ பியல் நிசாந்த த சில்வா                -            மூன்று மனுக்கள்
(viii)    கௌரவ (பேராசிரியர்) ஆசு மாரசிங்க
(ix)    கௌரவ (டாக்டர்) ராஜித சேனாரத்ன

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழான வினாக்கள்

(i)    கௌரவ டக்ளஸ் தேவானந்தா

வட மாகாணத்திலுள்ள வேலையில்லாப் ஆங்கில டிப்ளோமாதாரிகளுக்கு ஆங்கில ஆசிரியர் நியமனத்தை வழங்கல் தொடர்பானது

(ii)    கௌரவ ரஊப் ஹகீம்

முஸ்லிம்களுடைய வணக்கஸ்தலங்கள் மற்றும் ஏனைய சொத்துகள் மீதான தாக்குதல் தொடர்பானது


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

1978 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க, நீதித்துறைச் சட்டத்தைத் திருத்துவதற்காக

“நீதித்துறை (திருத்தம்)”

எனும் சட்டமூலத்தினை கௌரவ அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் அவர்கள் பிரேரித்தார்.


ஒத்திவைப்புப் பிரேரணை

“நாட்டில் நிலவும் இனவாத மோதல்கள்” தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ அநுர திசாநாயக்க அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1840 மணியளவில் பாராளுமன்றமானது 2018 மார்ச் 7ஆந் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom