2018 மார்ச் 08ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2018-03-08

Print

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’ :  பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்


சபாநாயகர் பத்திரங்களைச் சமர்ப்பித்தல்

இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 104ஆ (3) உறுப்புரையின் பிரகாரம் 2017.07.01 ஆம் திகதி முதல் 2017.09.30 ஆம் திகதி வரை  தேர்தல் ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கை


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ வஜிர அபேவர்தன                    
(ii)    கௌரவ சிசிர குமார அபேசேகர

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 3 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன:-

(i)    மதுவரி (திருத்தச்) சட்டமூலம் - திருத்தங்களுடன்
(ii)    நிதிச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(iii)    மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கட்டளை


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“வட மாகாணத்திலுள்ள கூட்டுறவுச் சங்கங்கள் ஆரம்பிக்கப்படும் நேரங்கள்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ இ. சாள்ஸ் நிர்மலநாதன் அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1723 மணியளவில் பாராளுமன்றமானது 2018 மார்ச் 9ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.