இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2018 மார்ச் 09ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2018-03-09

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சனாதிபதியின் செய்திகள்

A: பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் அவசகார நிலைமை விதிகளை பிரகடனம் செய்தல்


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’ :  பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

வியாபாரம் மற்றும் வணிகம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ செயிட் அலி ஸாஹிர் மௌலானா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 153 மற்றும் 154 ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன:-

(i)    வணிகக் கப்பற்றொழில் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(ii)    தேசிய கல்வி ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உப தலைவரின் ஊதியங்கள் மற்றும் ஆணைக்குழு அங்கத்தவர்களின் கொடுப்பனவுகளைத் திருத்தியமைத்தல்


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“ராஜாங்கனய விவசாயிகளின் ஆர்பாட்டத்தின் போது நடாத்தப்பட்ட தாக்குதலுக்கான விசாரணை” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ செஹான் சேமசிங்க அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1442 மணியளவில் பாராளுமன்றமானது 2018 மார்ச் 20ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom