இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2018 செப்டெம்பர் 19ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2018-09-19

கௌரவ செல்வம் அடைக்கலநாதன், குழுக்களின் பிரதித் தவிசாளர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 41ஆ (6) மற்றும் 55 (5) உறுப்புரைகளின் பிரகாரம், 2018 ஆம் ஆண்டின் முதலாவது காலாண்டிற்கான (2018.01.01 - 2018.03.31) அரசாங்க  சேவை ஆணைக்குழுவின் முன்னேற்ற அறிக்கை


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2017 ஆம் ஆண்டுக்கான கணக்காய்வு சேவைகள் ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கை
(ii)    2016 ஆம் ஆண்டுக்கான தேசிய சேமிப்பு வங்கியின் ஆண்டறிக்கை
(iii)    2013 ஆம் ஆண்டுக்கான கூட்டுறவு மொத்த விற்பனை தாபனத்தின் ஆண்டு அறிக்கையும் கணக்குகளும்
(iv)    2016 ஆம் ஆண்டுக்கான தென்னை ஆராய்ச்சி நிலையத்தின் ஆண்டறிக்கை
(v)    2016 ஆம் ஆண்டுக்கான தேயிலை சிறு பற்றுநிலங்கள் அதிகாரசபையின் ஆண்டறிக்கை

(vi)    2017 ஆம் ஆண்டுக்கான கம்பஹா மாவட்ட செயலகத்தின் செயலாற்றுகை மற்றும் கணக்குகள் அறிக்கை

(vii)    2016 ஆம் ஆண்டின் அரச தொழில்முயற்சி அபிவிருத்தி  அமைச்சின் செயலாற்றுகை தொடர்பில்  அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்ட  விடயங்கள் தொடர்பான 119 (4) ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம்,  அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை


பாராளுமன்ற நிலையியற் கட்டளை இல. 52(6) இன் கீழ் அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

பாராளுமன்ற நிலையியற் கட்டளை இல. 52(6) இன் பிரகாரம், “டாக்டர். எஸ்.எஸ். குணவர்தன சுதேச ஆயுர்வேத அபிவிருத்தி மன்றம் (கூட்டிணைத்தல்)” சட்டமூலம் பற்றிய அறிக்கை கௌரவ பாராளுமன்ற சபை முதல்வரினால் சமர்ப்பிக்கப்பட்டது.


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i)    வியாபாரம் மற்றும் வணிகம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ செயிட் அலி ஸாஹிர் மௌலானா அவர்கள் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ கே.கே. பியதாஸ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii)    உள்ளக நிருவாகம் மற்றும் அரச முகாமைத்துவம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கெளரவ காமினி லொக்குகே அவர்கள் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ வேலு குமார் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iii)    இளைஞர், விளையாட்டுத்துறை, கலை மற்றும்  மரபுரிமைகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ சீ.பீ. ரத்நாயக்க அவர்கள் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ கே.கே. பியதாஸ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iv)    பொருளாதார அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ ஹர்ஷன ராஜகருணா அவர்கள் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ கே.கே. பியதாஸ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ ரவீந்திர சமரவீர                   
(ii)    கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி               -         இரண்டு மனுக்கள்
(iii)    கௌரவ கே.கே. பியதாஸ                    
(iv)    கௌரவ சந்திம கமகே                       
(v)    கௌரவ பந்துல லால் பண்டாரிகொட
 (மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 3 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் சட்டமூலங்கள் சபையால் நிறைவேற்றப்பட்டன:-

(i)    பெருந்தோட்டப் பிராந்தியத்துக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபை
(ii)    பிரதேச சபைகள் (திருத்தம்) - திருத்தங்களுடன்
(iii)    இலங்கை ஆளணி முகாமை நிறுவகம் (திருத்தம்)


அதனையடுத்து, 1857 மணியளவில் பாராளுமன்றமானது 2018 செப்டெம்பர் 20ஆந் திகதி வியாழக்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom