இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கள்

பின்வரும் உறுப்பினர்களை உள்ளடக்கியவாறான அமைச்சரவை அமைச்சுக்களின் எண்ணிக்கைக்கு சமமான அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கள் இருத்தல் வேண்டும்:-

(அ) உரிய விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரவை அமைச்சர்-குழுவின் தவிசாளராவார்.

(ஆ) இராஜாங்க அமைச்சர்,

(இ) பிரதி அமைச்சர், மற்றும்

(ஈ) தெரிவுக் குழுவினால் நியமிக்கப்படும் வேறு ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்கள்.

குழுவின் கடமையானது எவரேனும் பாராளுமன்ற உறுப்பினரால் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதாக இருத்தல் வேண்டும்.

குழுவின் அங்கத்தவர்களுக்கு மேலதிகமாக எவரேனும் உறுப்பினர் குழுத் தவிசாளரின் அனுமதியுடன் குழுவின் கூட்டங்களில் கலந்து கொள்ளலாம்.

குழுவானது மாதத்திற்கு ஒரு தடவை கூடும் என்பதுடன் தமது கூட்டத்தினூடாக அறிந்து கொண்ட காண்புகளை இரண்டு வாரங்களிற்குள் பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடலும் வேண்டும்.

குழுவின் கூட்டமானது குறித்த அமைச்சின் செயலாளருடனான கலந்தாலோசனையுடன் கூட்டப்படலாம்.

அமைச்சுசார் ஆலோசனைக் குழுவானது எவரேனுமாளை அதன் முன்னர் அழைத்து விசாரிக்கவும், ஏதேனும் பத்திரத்தை, புத்தகத்தை, பதிவேட்டை அல்லது வேறு ஆவணங்களை கேட்டுப் பெறுவதற்கும் பரிசீலனை செய்வதற்கும் அதிகாரமுடையதாயிருத்தல் வேண்டும்.

குழுக்களிற்கான பொது விதிகள் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்களிற்கும் ஏற்புடையதாகும்.

112

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom