இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

உறுப்பினர் சேவைகள் அலுவலகம்

பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டவாக்கத் துறையினர் என்ற வகையில் தமது கடமைகளை வினைத்திறன் வாய்ந்ததாக மேற்கொள்ளும் / நிறைவேற்றும் நிமித்தம் அவசியமான தொலைபேசி வசதிகள், தபால் வசதிகள், காகிதாதிகள், தங்குமிட வசதிகள், மருத்துவ வசதிகள் போன்ற குறித்த சில அத்தியாவசியமான வசதிகளைப் பெற்றுக்கொள்ளுவதற்கு உரித்துடையவர்களாவர். உறுப்பினர் சேவைகள் அலுவலகம் பொதுவாக சட்டவாக்கத் துறையினருக்கு இத்தகைய சேவைகளை வழங்குகின்றது.

மேலும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினர்களுக்கும் மட்டும் பிரத்தியேகமாக நுவரெலியாவில் அமைந்துள்ள பத்தொன்பது அறைகளை உடைய விடுமுறை விடுதியான ‘சேனாதிபதி இல்லம்’ இந்த அலுவலகத்தினால் பராமரிக்கப்படுகின்றது.

மூன்று படுக்கை அறைகளையும் ஒரு களஞ்சிய அறையையும் சாப்பாட்டு / வதிவிடப் பகுதியையும் பணியாளர் கழிவறைகள் மற்றும் வாகனங்களை நிறுத்துவதற்கான இடவசதிகளையும் உள்ளடக்கிய ஒவ்வொன்றும் 900 சதுர அடிகள் பரப்புடைய 120 வீட்டு அலகுகளைக் கொண்ட மாதிவெல வீட்டுத் தொகுதியும் தகுதியுடைய உறுப்பினர்கள் வதிவதற்காக வாடகை அடிப்படையில் பெற்றுக் கொள்ளக் கூடியதாகவுள்ளது. அதே நேரம் இந்த வீட்டுத்தொகுதியைப் பராமரிக்கும் பணியும் இந்த அலுவலகத்தின் முக்கியமானவொரு கடமையாகும்.

இந்த உறுப்பினர் சேவைகள் அலுவலகம் கெளரவ சபாநாயகரது உத்தியோகபூர்வ இல்லத்திற்கும் ஒருசில சேவைகளை வழங்குகின்றது.

கெளரவ சபாநாயகரை தவிசாளராகக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் செளகரிகம் மற்றும் வசதிகள் ஆகியவற்றுடன் சம்பந்தமான விடயங்களைக் கவனத்திற்கொள்ளுகின்றதும் மற்றும் ஆலோசனைகளை வழங்குகின்றதுமான ஒரு பாராளுமன்றக் குழுவான சபைக் குழுவுக்கு இந்த அலுவலகம் சேவைகளை வழங்குகின்றது.

உறுப்பினர் சேவைகள் அலுவலகம் மேற்குறித்த சேவைகளைப் பெறுநர்கள் நன்கு திருப்தியடைவதை உறுதிப்படுத்தும் நோக்கில் குறித்த தொழிற்பாடுகள், செயற்பாடுகள் மற்றும் நிறுவனங்களின் முகாமைத்துவம் முதலிய விடயங்களை மேற்பார்வை செய்கின்றது.

உறுப்பினர் சேவைகள் அலுவலகத்தினால் கையாளப்படுகின்ற தொழிற்பாடுகள்

 • இந்த உறுப்பினர் சேவைகள் அலுவலகம் தேவையான போது உறுப்பினர்களின் உரித்துரிமைகள், வசதிகள் என்பன தொடர்பில் ஆலோசனைகளை வழங்குவதுடன் நிர்வாக சேவைகளையும் வழங்கி ஏனைய பல செயற்பாடுகளையும் ஒருங்கிணைக்கின்றது.
 • இது:-
  • பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அலுவலக வதிவிடத் தொலைபேசி வசதிகள்
  • மாதாந்த அடிப்படையில் காகிதாதிகள்
  • தபால் வசதிகள்
  • பாதுகாப்பு மின்விளக்குகள்
  • வைத்தியசாலை வசதிகள்
 • என்பவற்றை வழங்குகின்றது. அதே நேரம்
 • மாதிவெல வீடமைப்புத் திட்டத்திலிருந்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வீடுகளை ஒதுக்குதல்
 • நுவரெலியாவில் அமைந்துள்ள சேனாதிபதி இல்லத்திலிருந்து அறைகளை ஒதுக்குதல்
 • பாராளுமன்ற உறுப்பினர்களின் அலுவலகத் தொலைபேசிக் கட்டணங்களைச் செலுத்துதல்
 • மாதிவெல வீட்டு அலகுகள், கெளரவ சபாநாயகரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலம், நுவரெலியாவில் அமைந்துள்ள சேனாதிபதி இல்லம் ஆகியவற்றின் தொலைபேசி, நீர், மின்சாரம் ஆகிய கட்டணங்களைச் செலுத்துதல்
 • ஒருங்கிணைப்புப் பொறியியலாளர் திணைக்களத்துடன் இணைந்து மாதிவெல வீட்டு அலகுகள், நுவரெலியாவில் அமைந்துள்ள சேனாதிபதி இல்லம் ஆகியன தொடர்பான பழுபார்ப்பு / பராமரிப்புப் பணிகளை ஒருங்கிணைத்தல்
 • பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சுடன் இணைந்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான மருத்துவக் காப்புறுதி விடயங்களை ஒருங்கிணைத்தல்
 • மாதிவெல வீட்டுத் திட்டம், நுவரெலியாவில் அமைந்துள்ள சேனாதிபதி இல்லம் மற்றும் கெளரவ சபாநாயகரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலம் ஆகியவற்றுடன் சம்பந்தமான வரிமதிப்பீட்டு வரிகள் மற்றும் வரிகள் என்பவற்றைச் செலுத்துதல்
 • பாராளுமன்றக் குழுவின் செயலகக் கடமைகளைக் கவனித்தல் (கூட்ட அறிக்கைகளையும் கோவைகளின் பதிவுகளையும் பேணிப் பராமரித்தல்)

முதலிய விடயங்களையும் மேற்கொள்ளுகின்றது.

 

தொடர்பு கொள்க
chandralal_k@parliament.lk
   
பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom