இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

நிலைபெறுதகு அபிவிருத்தியை நோக்காகக் கொண்ட ஐக்கிய நாடுகளின் 2030 நிகழ்ச்சிநிரல் பற்றி விழிப்புணர்வூட்டும் அமர்வு

திகதி : 2017-03-24

நிலைபெறுதகு அபிவிருத்தியை நோக்காகக் கொண்ட ஐக்கிய நாடுகளின் 2030 - நிகழ்ச்சிநிரல் பற்றி கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களை விழிப்புணர்வூட்டும் அமர்வொன்று 2017.03.22 ஆம் திகதி பிரதம அமைச்சர் கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையில் பாராளுமன்றத்தின் 01 ஆம் இலக்க குழு அறையில் நடைபெற்றது. பிரதிச் சபாநாயகர் கௌரவ திலங்க சுமதிபால அவர்கள் இந்த அமர்வின் நோக்கம் பற்றிய சிறு விளக்கமொன்றை முன்வைத்தார். நிலைபெறுதகு அபிவிருத்தியின் நோக்கை அடைந்துகொள்ளும் பொறுட்டு நாடு முன்னெடுக்க வேண்டிய நடைமுறைகள் மற்றும் அவற்றின் முக்கியத்துவம் பற்றி கௌரவ பிரதம அமைச்சர் அவர்கள் கருத்து வெளியிட்டார்கள்.

 

நிலைபெறுதகு அபிவிருத்தியை நோக்காகக் கொண்ட ஐக்கிய நாடுகளின் 2030 - நிகழ்ச்சிநிரல் பற்றிய பாராளுமன்ற தெரிகுழுவின் முக்கியத்துவம் தொடர்பில் சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய அவர்களும் வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சர் கௌரவ காமினி ஜயவிக்கிரம பெரேரா அவர்களும் சிறு அறிமுகமொன்றை முன்வைத்தனர்.

 

 

 

 

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom