இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

“ஆசிய -பசுபிக் பிராந்தியத்தின் இளம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பிராந்தியக் கூட்டம்

திகதி : 2017-05-04

ஆசியா -பசுபிக் பிராந்தியத்தின் இளம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பிராந்தியக் கூட்டம் 2017 ஏப்பிறல் 25 தொடக்கம் 26 ஆம் திகதி வரை இலங்கை, கொழும்பிலுள்ள ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது.

 

அனைத்துப் பாராளுமன்ற ஒன்றியம் (IPU), ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் (UNDP) ஆகியவற்றுடன் இணைந்து இலங்கைப் பாராளுமன்றம் இதனை ஒழுங்கு செய்திருந்தது. இக்கூட்டத்தின் கருப்பொருள் “உள்ளடங்கலான மற்றும் அமைதியான சமூகங்களை முன்னேற்றுதல் மற்றும் வன்முறைசார் தீவிரவாதத்தைத் தடுத்தல் என்பவற்றில் இளம் பாராளுமன்ற உறுப்பினர்களின் வகிபங்கு” பற்றியதாகும்.

 

ஆசிய–பசுபிக் பிராந்தியத்திலுள்ள முப்பத்தொன்பது (39) நாடுகளின் தேசியப் பாராளுமன்றங்களைச் சேர்ந்த இளம் பாராளுமன்ற உறுப்பினர்களையும், அத்துடன் தெரிவு செய்யப்பட்ட இளைஞர் அமைப்புகள், வலையமைப்புகள் மற்றும் சங்கங்களைச் சேர்ந்த அதானிப்பாளர்கள் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். இலங்கைப் பிரதிநிதிகள் குழு, ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.), ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னைி (ஐ.ம.சு.மு.), மக்கள் விடுதலை முன்னைி (ம.வி.மு.) மற்றும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி (இ.த.அ.க.) ஆகியவற்றைச் சேர்ந்த 20 இளம் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்தது.

 

ஆரம்ப நிகழ்விற்கு பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமான கௌரவ ரணில் விக்கிரமசிங்க, பாராளுமன்ற சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய, அனைத்து பாராளுமன்ற ஒன்றியத் தலைவர் கௌரவ ஸேபர் சௌதரி மற்றும் ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் வதிவாளர் பிரதிநிதி திருவதி யூனா மெக்கலி ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

 

 

 

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom