இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

முன்மொழியப்பட்ட நிலையியற் கட்டளைகளின் இறுதி வரைபு பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது

திகதி : 2017-06-07

முன்மொழியப்பட்ட பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளின் இறுதி வரைபு கௌரவ சபாநாயகர் அவர்களினால் இன்று சபையின் கவனத்திற்காக சபாபீடமிடப்பட்டது. இது எதிர்வரும் தினமொன்றில் பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்படவுள்ளது.

 

அதற்கிணங்க, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 2017 ஜூன் 21ஆம் திகதிக்கு முன்னர் மேற்சொன்ன வரைபு தொடர்பாக அவர்களின் கருத்துக்கள், பிரேரணைகள் மற்றும் திருத்தங்கள் ஆகியவற்றை சமர்ப்பிக்க முடியும். முன்மொழியப்பட்ட நிலையியற் கட்டளைகளின் இறுதி வரைபின் அடிப்படைகள் தொடர்பான பொதுக் கலந்துரையாடலொன்று தேவைப்படின் 2017 ஜூன் 22 அன்று காலத்தை ஒதுக்கீடு செய்யலாம் என கௌரவ சபாநாயகர் அவர்கள் அறிவித்தார். அதன் பின்னர், முன்மொழியப்பட்ட வரைபு ஜூலை மாத முதலாவது அமர்வு வாரத்தில் சபையால் முன்னதாக நிறைவேற்றப்பட எதிர்பார்க்கப்படுகின்றது.

 

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான முன்மொழியப்பட்ட நடத்தைக் கோவையின் இறுதி வரைபு சபாநாயகர் அவர்களினால் சபாபீடமிடப்பட்டதுடன், பின்னர் ஒரு தினத்தில் நிறைவேற்றப்படவுள்ளது.

 

[ சபாநாயகரின் அறிவித்தல் (சிங்களத்தில்) ]

 

 முன்மொழியப்பட்ட பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளின் இறுதி வரைபு
 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான முன்மொழியப்பட்ட நடத்தைக் கோவையின் இறுதி வரைபு

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom