இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

“e-Chamber” எனும் சபாமண்டப முகாமைத்துவ தகவல் முறைமை நிறுவப்பட்டுள்ளது

திகதி : 2017-08-22

“e-Chamber” எனும் சபாமண்டப முகாமைத்துவ தகவல் முறைமை இன்று நிறுவப்பட்டது. இன்றை சபை அமர்வின் ஆரம்பத்தில் இதனை அமுலுக்கு கொண்டு வரும் வண்ணம் அறிவித்தலொன்றை சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய அவர்கள் விடுத்தார்.

 

இக்கருத்திட்டத்தின் கீழ் அனைத்து கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களின் மேசைகளுக்கும் மடிக்கணனியொன்று வழங்கப்பட்டுள்ளது. கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களினால் பாராளுமன்றத்தில், விசேடமாக சபாமண்டபத்தினுள் அவர்களது செயற்பாடுகளை மேலும் வினைத்திறனாகவும் செயற்றிறனாகவும் மேற்கொள்வதற்கு உதவி புரிவதே இதன் நோக்கமாகும். இக்கணினிகள் கியொஸ்க் (KIOSK) முறைமையில் நிறுவப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் கௌரவ உறுப்பினர்களின் செயற்பாடுகளை திறன்பட செய்வதற்கு தேவையான தரவுகள் உட்பட இணையம் மற்றும் மின்னஞ்சல் சேவைகளைப் பெற்றுக்கொள்ள இயலுமாகவுள்ளதுடன் இவ்வளவு காலமும் சபாமண்டபத்தினுள் நிறுவப்பட்டிருந்த வை-பை (Wi-Fi) ஊடாக இது வலையமைப்பு செய்யப்பட்டுள்ளது.

 

இக்கருத்திட்டத்திற்கான மடிக்கணினிகள் வெளிநாட்டு உதவியின் கீழ் பெற்றுத் தரப்பட்டுள்ளதுடன், தேவையான மென்பொருள் பாராளுமன்ற தகவல் முறைமைகள் மற்றும் முகாமைத்துவத் திணைக்களத்தினால் விருத்தி செய்யப்பட்டுள்ளது.

 

இந்த முறைமை ஊடாக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சட்டவாக்க தகவல்கள் (சட்டமூலங்கள், மனுக்கள், வினாக்கள், முதலியன), தனிப்பட்ட தகவல்கள் (சம்பள விபரம், வரவு விபரம், முதலியன), குறித்த தினத்திற்கான அலுவல்கள் தொடர்பான தகவல்கள் (ஒழுங்குப் பத்திரம், தினத்திற்கான நிகழ்ச்சி நிரல், குழு நிகழ்ச்சி நிரல் முதலியன) மற்றும் ஆவணக் காப்பக தகவல்கள் (ஹன்சாட், குழு அறிக்கைகள், முதலிய) போன்ற சேவைகளை பெற்றுக் கொள்ளலாம்.

 

நீண்ட காலத்திற்கு இச்சேவைகளை வழங்குவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களது பூரண ஆதரவை நல்குமாறும் கேட்டுக் கொண்டதுடன் இதன் மூலம் வழங்கப்படுகின்ற வசதிகள் அவர்களது பாராளுமன்றக் கடமைகளை மேலும் இலகுவாகவும் திறமையாகவும் மேற்கொள்வதற்கு உதவியாக இருக்கும் என கேட்டுக் கொண்டார்.

 

1 2

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom