இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2015ஆம் நிதியாண்டிற்கான அரசாங்கக் கணக்குக் குழுவின் முகாமைத்துவ தகவல் முறைமையினை (e-PAC) அடிப்படையாகக் கொண்ட செயலாற்றுகை மதிப்பீடு - சிறந்த செயலாற்றுகையைக் காண்பித்த நிறுவனங்களை இனங்காணலும் தேசிய விருது வைபவமும்

திகதி : 2017-11-13

பாராளுமன்ற அரசாங்கக் கணக்குக் குழு, அதன் தவிசாளர் கௌரவ லசந்த அலகியவன்ன அவர்களின் வழிகாட்டலின் கீழ், குழுவின் கண்காணிப்பின் கீழ் வருகின்ற தேசிய ரீதியிலான 831 அனைத்து அரச நிறுவனங்களையும் மதிப்பீடு செய்வதற்கான இணைய மயப்படுத்தப்பட்ட கணனி நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்தியிருந்தது. இம்முறைமையின் மூலம் அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள், மாகாண சபைகள், மாவட்ட செயலகங்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் உள்ளடங்கிய அனைத்து நிறுவனங்களினதும் 2015ஆம் நிதியாண்டிற்கான தரவுகளை மதிப்பீடு செய்வதன் ஊடாக, சிறந்த செயலாற்றுகையை வெளிப்படுத்திய 81 நிறுவனங்களுக்கு விருதுகளை வழங்க அரசாங்கக் கணக்கு குழுவானது ஏற்பாடு செய்திருந்தது.

 

அதற்கிணங்க, 2015ஆம் நிதியாண்டில் சிறந்த செயலாற்றுகை வெளிப்படுத்திய நிறுவனங்களை அடையாளங் காண்பதற்காக, விருது வழங்கும் வைபவம் 2017 நவம்பர் 13ஆம் திகதி இன்று மதியம் 12.00 மணிக்கு குழு அறை இல. 01 இல் நடைபெற்றது. அதிமேதகு சனாதிபதி அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், கௌரவ பிரதம அமைச்சர் மற்றும் சபாநாயகர் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச நிறுவனங்களின் மற்றும் பாராளுமன்றத்தின் அதிகாரிகள் மற்றும் பிற விருந்தினர்களும் வருகை தந்திருந்தனர்.

 

இம்முறைமையை அமல்படுத்துவதற்காக பாராளுமன்றத்தின் தகவல் முறைமைகள் மற்றும் முகாமைத்துவத் திணைக்களத்தால் வழங்கப்பட்ட சிறந்த சேவைகளை கௌரவிக்கும் விதத்தில், அதிமேதகு சனாதிபதி அவர்களினால் இதன் பணிப்பாளருக்கு ஒரு விசேட அடைவு விருது வழங்கப்பட்டது.

 

1 2

3 4

5 6

7 8

9 10

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom