இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

இலங்கையின் சுதந்திரத்தின் 70வது ஆண்டு நிறைவு மற்றும் யப்பான்-இலங்கை உறவை உறுதிப்படுத்திக் கொள்ளல் நிகழ்வு

திகதி : 2018-01-10

யப்பானின் ஹொங்கன்ஜி மன்றத்தின் தலைவர் அதிவண. சொஹ்ஜூன் ஒஹ்டானி தேரரின் தலைமையிலான யப்பான் தூதுக்குழுவொன்று 2018 சனவரி மாதம் 9ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு வருகை தந்ததுடன், அவர்களுக்கு அதி உன்னத வரவேற்பளிக்கப்பட்டது. இந்த தூதுக்குழுவில் இலங்கைக்கான யப்பான் தூதுவர் கெனிச் சுகனுமா அவர்கள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் உள்ளடங்கியிருந்தனர்./p>

 

அதன்படி, இலங்கையின் சுதந்திரத்தின் 70வது ஆண்டு நிறைவு மற்றும் யப்பான்-இலங்கை பிணைப்பினை மீளஉறுதிபடுத்திக் கொள்வதற்கானதோர் நிகழ்வு பாராளுமன்ற குழு அறை இல. 1 இல் இடம்பெற்றது. அங்கு, பாராளுமன்ற சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய அவர்களினால் ஆரம்ப உரை நிகழ்த்தப்பட்டதன் பின்னர் இலங்கைக்கான யப்பான் தூதுவர் கெனிச் சுகனுமா அவர்களினால் கூடியிருந்தோருக்கு உரை நிகழ்த்தப்பட்டது.

 

அதன் பின்னர், இலங்கையின் பிரதம அமைச்சர் கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களினல் வரைவேற்புரையும், யப்பானின் ஹொங்கன்ஜி மன்றத்தின் தலைவர் அதிவண. சொஹ்ஜூன் ஒஹ்டானி தேரரினால் முக்கிய சொற்பொழிவொன்றும் ஆற்றப்பட்டது. நிகழ்வை முடிவுக்கு கொண்டுவந்து நன்றியுரையினை இலங்கை-யப்பான் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவர், கௌரவ அமைச்சர் நவின் திசாநாயக்க அவர்கள் ஆற்றினார்.

 

இவ்வருகையின் போது தூதுக்குழுவானது, பாராளுமன்ற சபாமண்டபத்திற்கான சுற்றுலாவிலும் ஈடுபட்டது.

 

1 2

3 4

5 6

78

910

 

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom