இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

குடிமக்களின் வீரச்செயல்களுக்கான விருது வழங்கல்

திகதி : 2018-01-12

“குடிமக்களின் வீரச்செயல்களுக்கான விருதுகள்” வழங்கல் சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய அவர்களின் தலைமையில் 2018 ஜனவரி 10ஆம் திகதி பாராளுமன்ற குழு அறை இல. 01 இல் இடம்பெற்றது. கௌரவ சபாநாயகர் விசேட போசகராகவுள்ள குடிமக்களின் வீரச்செயல்களுக்கான இலங்கை மன்றத்தினால் இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன.

 

இவ்வருட வைபவத்தின் போது, “குடிமக்களின் வீரச்செயல்களுக்கான ஆசியாவின் தங்கப் பதக்கம்” 27 வயதுடைய நேபாளத்தைச் சேர்ந்த சமூக சேவையாளரான திரு. லக்ஷமி சுந்தர் கென்ஜூ அவர்களுக்கு வழங்கப்பட்டது. 2015 பூகம்பத்தின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதில் மற்றும் பல மக்களை மீட்பதில் அவர் காட்டிய முயற்சிகள் இத்தினத்தின் போது அங்கீகரிக்கப்பட்டன. அதன் பின்னர், ஆபத்துமிக்க சந்தர்ப்பத்தில் வெற்றிப் பெருமிதத்தைக் கொண்டு வந்து சேர்த்ததற்காக “குடிமக்களின் வீரச்செயல்களுக்கான சிறந்த ஊக்கப்படுத்தல் விருது” எவரெஸ்ட் சிகரத்திற்குச் சென்ற முதல் இரண்டு இலங்கையர்களான திருவதி ஜயந்தி குரு உடும்பல மற்றும் ஜொஹான் பீரிஸ் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இம்மூன்று விருதுகளும் கௌரவ சபாநாயகர் அவர்களினால் வழங்கப்பட்டன.

 

இந்நிகழ்வில் இலங்கைக்கான நேபாளத்தின் உயர் ஸ்தானிகர் உள்ளிட்ட பல அதிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 

1 2

3 4

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom