இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

ப்ரீட்ரிச் நூமன் அமைப்புடன் (FNF) இணைந்து முன்மொழியப்பட்டுள்ள பாராளுமன்ற ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவகத்தை தாபித்தல்

திகதி : 2018-02-27

ஜே.ஆர். ஜயவர்தன நிறுவகம் பாராளுமன்ற ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவகமாக அபிவிருத்தி செய்வது சம்பந்தமாக பாராளுமன்ற செயலாளர் நாயக காரியாலயம் மற்றும் ப்ரீட்ரிச் நூமன் அமைப்பிற்கிடையில் 2018 ஆம் ஆண்டிற்கான ஒத்துழைப்பிற்கான ஒப்பந்தமொன்று 2018 பெப்ரவரி மாதம் 23 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டது.

 

பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் உள்ளடங்கலாக ஏனைய அரசியல் பிரதிநிதிகள் ஆகியோருக்கு அத்தயவசியமான தகவல் தேவைகளை பூர்த்தி செய்வதையும் ஆராய்ச்சி சான்றுகளை வழங்குவதையும் பிரதான குறிக்கோளாக கொண்ட இக்கருத்திட்டத்திற்காக 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் கைச்சாத்திடப்பட்ட ஒத்துழைப்பிற்கான ஒப்பந்தங்களுக்கு பின்னர் இவ்வருடத்தில் மேலும் வசதிகளை பெற்றுக் கொடுக்க ப்ரீட்ரிச் நூமன் அமைப்பு எதிர்பார்க்கின்றது. இணைந்த பல்கலைக்கழகங்கள் மூலம் பெற்றுக் கொள்ளக்கூடிய கல்வியியல் தகைமைகளை பெற்றுக் கொள்வது வரையான நீட்சிக்கு, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏற்புடைய கல்விசார் பாடநெறிகள் பலவும் இந்நிறுவகத்தினால் நடாத்தப்படுகின்றன.

 

சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய, பாராளுமன்ற செயலாளர் நாயகம் திரு. தம்மிக தசநாயக்க மற்றும் ப்ரீட்ரிச் நூமன் அமைப்பின் இந்நாட்டு பிரதிநிதி திருமதி. சாகரிகா தெல்கொட ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom