இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

அரசியலமைப்புப் பேரவைக்கு உறுப்பினர்கள் அல்லாத புதிய மூன்று நபர்களின் பெயர்கள் பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்டது

திகதி : 2018-10-11

அரசியலமைப்பின் 41அ உறுப்புரையின் (1) ஆம் துணை உறுப்புரையின் (உ) உப பந்தி மற்றும் (4) மற்றும் (5) ஆம் பந்திகள் ஆகியவற்றின் கீழ் அரசியலமைப்புப் பேரவைக்கு பிரதம அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய இருவரினாலும் பெயர் குறித்து நியமிக்கப்படுதலின் பேரில், பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லாதோரான, கலாநிதி ஜயந்த தனபால, திரு. அஹமட் ஜாவிட் யூசுப், திரு. நாகநாதன் செல்வக்குமாரன் ஆகியோரை பெயர் குறிப்பிடுவதானது, அரசியலமைப்பின் 41அ உறுப்புரையின் (5) ஆம் பந்தியின் கீழ் பாராளுமன்றத்தினால் இன்றைய தினம் நிறைவேற்றப்பட்டது.

 

கலாநிதி (திரு) அஹங்கமகே டியூடர் ஆரியரத்தின, ஜனாப் சிப்லி அஸீஸ் மற்றும் கலாநிதி (செல்வி) ராதிகா குமாரசுவாமி ஆகியோர் உறுப்பினர்கள் அல்லாத உறுப்பினர்களாக 2015 செப்டெம்பர் முதல் 2018 செப்டெம்பர் வரை பிரதிநிதித்துவம் செய்தனர்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom