இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

இவ்வாரம் பாராளுமன்றத்தில் (ஜுலை மாத முதலாம் அமர்வு வாரம்)

திகதி : 2014-07-15

mace

 

2014 ஜூலை 08ஆம் திகதி, வீதி வாகன விபத்துக்களைக் குறைத்தல், பாதுகாப்பான பொதுப் போக்குவரத்து சேவையை மேம்படுத்தல் எனும் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு carமோட்டார் வாகன சட்டத்தின் (அத்தியாயம் 203) கீழ், 2014 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க “மோட்டார் வாகனம் (பொதுச் சேவை சாரதி உரிமம்) எனும் ஒழுங்குவிதிகள் 2015.01.01 முதல் அமுலுக்கு வரும் வகையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. (அதி விஷேட வர்த்தமானி அறிவித்தல் இல. 1848/29 - 2014.02.06).

 

இதன்படி, பயணிகளை ஏற்றிச் செல்லும் பொதுப் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் சாரதிகள் பின்வரும் தகைமைகளைப் பெற்றிருத்தல் வேண்டும்.

  • 23-65 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல்.
  • உரிய சாரதி அனுமதிப்பத்திரத்துடனான இரண்டு வருடகால சேவை அனுபவம்.
  • 3. தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அல்லது அதன் மூலம் அனுமதிக்கப்பட்ட நிறுவனமொன்றிலிருந்து பெற்றுக்கெள்ளப்பட்ட மருத்துவ, முதலுதவி கற்கை நெறி, பொறிமுறை அறிவு தேர்ச்சி மற்றும் பயிற்சிக் கற்கைச் சான்றிதழ்கள்.
  • இலங்கை சட்டத்தின் கீழ் குற்றவியல் பதிவேடுகளை கொண்டிருக்காமலிருத்தல்.

 

குறித்த தகைமைகளுடனான விண்ணப்பதாரிகள், தமது விண்ணப்பப் படிவத்தை மோட்டார் வாகன தலைமையதிபதிக்குச் சமர்ப்பித்து அனுமதி பெறல் வேண்டும். இதற்கான கட்டணம் ரூபா 2,000 ஆகும்.

 

2014 ஜூலை 09ஆம் திகதி, நச்சுத் தன்மைமிக்க இரசாயணக் கழிவுப் பொருட்கள் கடலில் அல்லது கடல் சார் சூழலில் போடப்படுவதனால் கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் சமுத்திர வளங்கள் அபாயத்தை எதிர்கொண்டுள்ளன. seaஇச்செயல் முறை மானிட நடவடிக்கைகளை, குறிப்பாக உல்லாசப் பயணத்துறையிலும் தாக்கம் செலுத்தியுள்ளது. எனவே இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் 2008/35ம் இலக்க கடல்சார் மாசாக்கலைக் கட்டுப்படுத்தும் சட்டத்தின் கீழான இரண்டு ஒழுங்குவிதிகள் நிறைவேற்றப்பட்டன.

 

இதன்படி, கரையோர வலயங்களில் மேற்கொள்ளப்படும் எண்ணெய் சேகரம் மற்றும் பரிமாற்றச் சேவையில் ஈடுபடும் நபர்கள்/முகவர்கள் சடல்சார் சூழலியல் பாதுகாப்பு அதிகார சபையின் அனுமதியைப் பெறுவதுடன், அதன் கண்காணிப்பின் கீழ் அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படல் வேண்டும் (அதி விஷேட வர்த்தமானி அறிவித்தல் இல. 1771/19).

 

மேலும், எந்தவொரு நபரும் தீங்குவிளைவிக்கும் மாசாக்கிகளைக் கடலில், கடல்சார் சூழலில் போட முடியாது என்றும், தீங்கற்ற அனுமதிக்கப்பட்ட கழிவுகளை இனங்கானப்பட்ட கடற்பரப்பில் போடுவதாயின் அதற்கான உரிய அனுமதி கடல்சார் சூழலியல் பாதுபாப்பு அதிகார சபையிடம் பெற்றுக்கொள்ளல் வேண்டும் என்றும் இரண்டாவது ஒழுங்குவிதி குறிப்பிடுகின்றது.

(அதி விஷேட வர்த்தமானி அறிவித்தல் இல. 1829/38 - 2013.09.27).

 

 police logo

2014 ஜூலை 10ஆம் திகதி, நாட்டின் சட்டமும் ஒழுங்கும் சீர்குழைந்துள்ளமை தொடர்பாக எதிர்க்கட்சி சர்பாக முன்மொழியப்பட்ட ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதம் முன்னெடுக்கப்பட்டது. இங்கு பொலிஸ் திணைக்களத்தின் சட்ட ஒழுங்குக்கு முரணான விடயங்கள் விமர்சனத்துக்கு உட்படுத்தப்பட்டதுடன், அளுத்கம, தர்கா நகர் மற்றும் பேருவலை பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைச் சம்பவங்களின் போது பொலிஸ் திணைக்களம் தமது கடமையை நியாயமான முறையில் முன்னெடுத்ததா? என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது.

 

 

 

2014 ஜூலை 11ஆம் திகதி, கணிதம், பெளதீகவியல், இரசாயனவியல் மற்றும் மெய்யியல் எனும் அடிப்படைக் கற்கைநெறிகளை ஊக்குவித்தல், துறைசார் ஆய்வு நடவடிக்கைகளை மேம்படுத்தல் IFS logoஎனும் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு 1981ம் ஆண்டின் 55ம் இலக்க சட்டத்தின் மூலம் இலங்கை அடிப்படைக் கற்கைகள் நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டது. குறித்த சட்டம் மீதான திருத்தப் பிரேரணை மூலம் அதன் ஆளுநர் சபைக்கு ஜனாதிபதியின் விஞ்ஞான விடயங்கள் தொடர்பான ஆலோசகர், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தவிசாளர், குறித்த நிறுவனத்தின் பணிப்பாளராகக் கடமையாற்றியவர் என்ற தரத்தில் முன்னாள் அதிகாரிகள் நியமிக்கப்படலாம் என்றும், குறித்த சபைக்கு மேலும் 4 உறுப்பினர்கள் ஜனாதிபதியினாலும், 02 உறுப்பினர்கள் விடயம் தொடர்பான அமைச்சரினாலும், 02 உறுப்பினர்கள் ஆய்வுப் பேரவையின் மூலம் தெரிவுசெய்யப்பட்டல் வேண்டும் என்ற விடயம் முன்மொழியப்பட்டு, திருத்தமாக நிறைவேற்றப்பட்டது.

 

அதே தினம், 1938 ஆம் ஆண்டு 51 ஆம் இலக்க கம்பனி சட்டம் மற்றும் 1891 ஆம் ஆண்டு 16 ஆம் இலக்க சங்கங்கள் கட்டளைச் சட்டத்த்ன் கீழ் கணக்காய்வாளர்கள் மற்றும் சங்கங்களைப் பதிவு செய்தல் செயல்முறையுடன் தொடர்பான ஒழுங்குவிதிமுறைகள் நிறைவேற்றப்பட்டன. இதன்படி, சுமார் 60 வருடங்களுப் பின்னர் குறித்த பதிவு நடவடிக்கைகளுடன் தொடர்பாக அறவிடப்பட்ட கட்டணங்களில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

(அதி விஷேட வர்த்தமானி அறிவித்தல் இல. 1841/08 - 2013.12.18 : இல. 1847/02 - 2014.01.27).

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom