இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

இவ்வாரம் பாராளுமன்றத்தில் (ஜுலை மாத இரண்டாம் அமர்வு வாரம்)

திகதி : 2014-07-31

mace

 

ஜூலை 22ஆம் திகதி, செவ்வாய்க்கிழமை

பீடைகொல்லிகளைகளின் பாவனையைக் கட்டுப்படுத்தல் மற்றும் அவற்றின் எதிர்மறைத்தாக்கங்களைக் குறைத்தல் எனும் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு 1980 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க பீடைகொல்லிகளைக் கட்டுப்படுத்தல் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது (அதி விஷேட வர்த்தமானி அறிவித்தல் இல. 1848/29 - 2014.07.08).

 

புதிய ஒழுங்குவிதிகளின் அடிப்படையில், பீடைகொல்லிகளைகளைப் பதிவுசெய்வதற்கு அவை தொடர்பாக அரச ஆராய்ச்சி நிறுவனத்தினால் வழங்கப்பட்ட உயிரியல் வினைத்திறன் சான்றிதழ் சமர்ப்பிக்கப்படுவதுடன் பீடைகொல்லி இறக்குமதிக்கான அனுமதி பீடைகொல்லிகள் பதிவாளரிடமிருந்து பெறப்படல் வேண்டும். முதல் முறையாக ஒரு புதிய இன பீடைகொல்லி பதிவுக்கான விண்ணப்பம் கோரப்படும் போது, குறித்த விண்ணப்பப் படிவத்துடன் குறித்த பீடைகொல்லி சுற்றுச் சூழலுக்கோ அல்லது வன விலங்குகளுக்கோ எவ்விதத் தீங்கும் அற்றது என பீடைகொல்லிகள் பதிவாளரினால் வழங்கப்பட்ட மதிப்பீட்டு அறிக்கை இணைக்கப்பட்டிருத்தல் வேண்டும்.

 

poisonஇந்த ஒழுங்குவிதிகளின் அடிப்படையில், பீடைகொல்லிகளைப் பதிவுசெய்வதற்கான பொதுவான விண்ணப்பப் படிவக் கட்டனம் ரூபா 100,000.00 ஆகவும், மட்டுப்படுத்தப்பட்ட பீடைகொல்லிகளிகளுக்கான மேலதிக பதிவுக்கட்டனம் ரூபா 6,500.00 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பங்களை மீள்பரிசீலனை செய்யதல் அல்லது இரத்துச் செய்தல் என்பனவற்றுக்கு தலா ரூபா 10,000.00 மற்றும் பதிவைப் புதுப்பித்தல் நடவடிக்கைக்கு ரூபா 4,000.00 அறவிடப்படும்.

 

அதே தினம், ‘காலி நகரின் மேல் டிக்சன் வீதியை மூடல்’ தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணை எதிர்க்கட்சியினால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

 

julyஜூலை 23ஆம் திகதி, புதன்கிழமை

‘1983 ஜுலை வேலைநிறுத்தம்’ தொடர்பான அரசதரப்பின் ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதம் சபையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

 

 

ஜூலை 24ஆம் திகதி, வியாழக்கிழமை

law booksசட்ட ஒழுங்குடன் தொடர்பான சில பிரச்சினைகளைச் சீர்செய்யும் பொருட்டு கால விதிப்பு (திருத்தச்) சட்டமூலம் நீதி அமைச்சினால் முன் மொழியப்பட்டு சபையால் நிறைவேற்றப்பட்டது.

 

அதே தினம், ‘மீன்பிடிக் துறைக்கு வழங்கப்படும் எரிபொருள் மானியம் தெடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பான எதிர்க்கட்சியினால் முன்மொழியப்பட்ட ஒத்திவைப்புப் பிரேணை மீதான விவாதம் சபையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

 

 

ஜூலை 25ஆம் திகதி, வெள்ளிக்கிழமை

மறைந்த பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ டியுடர் தயாரத்ன மற்றும் கௌரவ ஆர்.எம். அப்புஹாமி தெடர்பான அனுதாப உரைகள் பாராளுமன்றத்தில் ஆற்றப்பட்டன.

 

அதே தினம், பலஸ்தீனின் காஸா மீது இஸ்ரேலினால் மனிதநேயமற்ற முறையில், சர்வதேச சட்ட ஒழுங்குகளை மீறும் வகையிலும், தொடர்ச்சியாக மேற்கெள்ளப்படும் தாக்குதல்கள் தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணை சபையில் முன்வைக்கப்பட்டு விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

tudor dayarathna    r.m. appuhamy

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom