இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

இவ்வாரம் பாராளுமன்றத்தில் (ஆகஸ்ட் மாத முதலாம் அமர்வு வாரம்)

திகதி : 2014-08-13

mace

 

ஆகஸ்ட் 5 ஆம் திகதி

ஆண்டின் நடுப்பகுதிக்கான நிதி நிலை அறிக்கை தொடர்பான ஒருநாள் ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதம் முன்னெடுக்கப்பட்டது. இப்பிரேரணை அரசாங்கம் சார்பான உறுப்பினர் ஒருவரினால் முன்மொழியப்பட்டது. இங்கு நாட்டின் தலாவருமானமானது நடுத்தர வருமானநிலையை அடைந்து முன்னேறியுள்ளதுடன், இது ஐ.அ.டொ 3280 எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உட்கட்டமைப்பு வசதிகளில் ஏற்பட்ட பாரிய முன்னேற்றங்கள், திருப்திகரமான படுகடன்வகிதங்கள், வெளிநாட்டு ஒதுக்கங்கள் போன்றவற்றில் ஏற்பட்ட பரந்துபட்ட சாதகமான விளைவுகளை அரசாங்க உறுப்பினர் விபரிதார். மறுபுறம் எதிர்கட்சியினர் நாட்டின் கடன்சுமையானது அதிகரித்துள்ளது எனவும் மற்றும் பல உற்பத்தித்திறனற்ற முயற்சிகள்மீது முதலீடுகள் செய்யப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டினர். மேலும் நாட்டின் வாழ்க்கைச்செலவு மிகவும் அதிகரித்துச்செல்வதானது ஒரு எதிர்மறையான அம்சம் எனவும் விவரித்தனர்.

 

ஆகஸ்ட் 6 ஆம் திகதி

வெளிவிவகாரங்கள் தொடர்பான ஒரு நாள் ஒத்திவைப்புப் பிரேரணைமீதான விவாதம் இடம்பெற்றது. இப்பிரேரணை எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்பட்டதுடன் அரசின் குறுகிய நோக்குடைய வெளியுறவுக் கொள்கையின் காரணத்தினால் பல பேரழிவுக்கும், இலங்கையின் காடினமான நிலைக்கும் காரணமாக இருந்துள்ளதுடன் சர்வதேச தலையீடுகளும் ஏற்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டியதுடன், பல வெளிநாட்டு இராஜதந்திரிகள் நியமனங்கள் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது எனக்குறிப்பிட்டனர். ஆனால் இலங்கையின் அயல்நாடுகளுடனான உறவுகள் வலுவடைந்துள்ளது எனக் அரசாங்க உறுப்பினர் குறிப்பிட்டதுடன் உதாரணமாக பா. ஜா.க குழுவினர் இலங்கைக்கு விஜயம் செய்து பல சாதகமான கருத்துக்களை தெரிவிதுள்ளனர் என குறிப்பிட்டனர்.

 

ஆகஸ்ட் 7 ஆம் திகதி

காலவிதிப்பு (விசேட ஏற்பாடுகள்) சட்மூலம் தொடர்பான விவாதம் இடம்பெற்றது. ஆனால் உறுப்பினர்கள் அதனைப்படிக்க அதிக நேரம் தேவைப்படுவதால் விவாதம் பிற்போடப்பட்டது . ஆயுத மோதல்களின் போது பல நபர்கள் தமது சொத்துக்கள் மீதான உரிமையினை பாதுகாக்க முடியாமல் பேயுள்ளது. இந்தப் பிரச்சினையின் பொருட்டு இந்த சட்ட மூலம் கொண்டுவர முடிவுசெய்யப்பட்டுள்ளது.

 

ஆகஸ்ட் 8 ஆம் திகதி

நான்கு தனிநபர் உறுப்பினர்களது பிரேரணைகள் எடுத்துக்கொள்ளப்பட்டது.

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom