இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

இவ்வாரம் பாராளுமன்றத்தில் (செப்டெம்பர் மாத இரண்டாம் அமர்வு வாரம்)

திகதி : 2014-09-29

mace

 

2014 செப்டெம்பர் 23

நிர்மாணத்தொழில் அபிவிருத்திச் சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் இடம்பெற்றது. இது நிர்மாணத்துறை, பொறியியல் சேவை, வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சர் அவர்களால் 19 ஆகஸ்ட் 2014 அன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. 2014 ஆகஸ்ட் 11ஆம் திகதிய வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டது.

 

இச்சட்டமூலத்தின் பிரதான நோக்கங்களாவன நிர்மாண தொழிலின் செயற்பாடுகளை ஒழுங்குபடுத்துதல், பதிவு செய்தல், விதிமுறைப்படுத்துவதுமாகும். நிர்மாணம் மீதான தேசிய மதியுரைப் பேரவையை தாபிப்பதற்கு ஏற்பாடுகள் செய்தல் நிர்மாணத் தொழில் அபிவிருத்தி அதிகாரசபையினையும் அபிவிருத்தி நிதியத்தினையும் ஏற்படுத்துவதுமாகும். மேலும் தொழிலுடன் தொடர்புடைய உயர் தொழிலாளர்கள், உற்பத்தியாளர்கள் வழங்குநர்கள், ஒப்பந்தக்காரர்கள் மற்றும் கைவினைஞர்கள் போன்றோரின் முன்னேற்றத்திற்கும் நல்வாழ்வுக்காவும் வழிமுறைகளை ஏற்படுத்துவதும் இதன் மற்றைய நோக்கமாகவுள்ளது.

 

இச் சட்டத்தின் கீழ் நிர்மாணம் மீதான தேசிய கொள்கையை உருவாக்குவதாகும். நிர்மாணம் மீதான தேசிய மதியுரை பேரவையானது அமைக்கப்படுவதுடன் இது நிர்மாணத் தொழிலின் அபிவிருத்தி அதிகார சபையை ஒத்ததாக காணப்படவேண்டும்.

 

பங்குதாரர்களைப் பதிவுசெய்தல், கட்டிடப்பொருட்களின் தரத்தினையும் தொழிலாளர்களையும் மதிப்பிடுதல் மற்றும் மேற்பார்வை செய்தல் மேலும் கட்டுமானம் தொடர்பான ஆராய்ச்சிகளையும், பயிற்சிநெறிகளையும் வழங்குவது இதன் பிரதான அம்சமாகும்.

 

இவ் அபிவிருத்தி நிதியமானது அதன் பங்குதாரரின் நலன்கருதி உருவாக்கப்படுகின்றது. நிர்மாணம் தொடர்பான தீர்வையானது நிர்மாணத் தொழில் அபிவிருத்தி தீர்வை என அழைக்கப்படுகின்றது.

 

அதிகாரசபையானது நிர்மாணம் தொடர்பான பிணக்குகளை மத்தியஸ்தம் செய்யும் அதிகாரத்தை கொண்டுள்ளது. மேலும் தேசிய ரீதியிலான நிர்மாணத் தொழில் தொடர்பான தகவல்களை பராமரிப்பதுடன் தகவல் செயலகத்தினையும் உருவாக்குதல் வேண்டும்.

 

2014 செப்டெம்பர் 24

ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள் வினவப்பட்டன. இதன் போது கேட்கப்பட்ட எட்டு வினாக்களில் ஐந்து வினாக்களுக்கு அமைச்சர்கள் பதில்களை வழங்கியதுடன் மற்றைய மூன்று வினாக்களிற்கான விடைகளை வழங்குவதற்கு மேலதிக நேரம் தேவைப்படுவதாக கேட்டுக்கொண்டனர்.

 

2014 செப்டெம்பர் 25

வரட்சி தொடர்பான ஒரு முழு நாள் ஒத்திவைப்பு விவாதம் இடம்பெற்றது. எதிர்க்கட்சியினர் இப்பிரேரணையினைக் கொண்டுவந்தனர்.

 

 

2014 செப்டெம்பர் 26

எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்பட்ட ஊழியர் சேமலாபநிதியம் மற்றும் ஊழியர்நம்பிக்கை நிதியம் மீதான ஒரு முழு நாள் ஒத்திவைப்பு விவாதம் இடம்பெற்றது.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom